நிலவிலிருக்கும் கறையாக
ஏதோ ஒன்று
உன் பார்வையில்,
என்னைத் துன்புறுத்தி
எதையோ தேட முயல்கிறது
எனக்குள்ளே துழாவி..!
அழகிய வர்ணங்களால்
வரையப்பட்ட ஓவியம்,
ஆனாலு
பிசாசுகளின் கோரத்தாண்டவ சித்தரிப்பாக
ரசிக்க முடியாத சங்கடம்!
அழகிய பூவின் இதழ்களை
காற்றில் சருகுகளாய்
பிய்தெறிந்த
கொடூரமான கூரிய நகங்களில்
நாசூக்கான நகப்பூச்சு
அலங்காரமாய் தெரியவில்லை!
நிஜத்தின் பிம்மங்களை
பேதமைப் படுத்திய
உன் கண்ணாடி அரியத்தின் கீழ்
என் அன்பை பஞ்சாக எரிக்கும்
சூரியக் கதிரின்
தெறிப்புகள்...!
கலாபூஷணம் திருமதி. கோகிலா மகேந்திரன் அகவை 75
-
இன்று நவம்பர் மாதம் 17 ஆம் திகதி நமது ஈழத்துப் பன்முகப் படைப்பாளி திருமதி.
கோகிலா மகேந்திரன் அவர்கள் தனது 75 ஆவது அகவையில், பவள விழா ஆண்டில்
அடியெடுத்து வ...
3 days ago








No comments:
Post a Comment