Saturday, December 29, 2007

ஆழிப் பேரலை - 2004. நினைவு!

எத்தனை உயிர்கள்? எத்தனை உறவுகள்?
காவு கொண்ட நாளது..
எத்தனை காலம் போனாலும்
மாறாத ரணமது ,

அலைகளெல்லாம் ஆழியாகி அழிக்க வல்லது
இயற்கை அன்னையின்
ஊழித் தாண்டவத்தின் உச்சம் கொடியது..
விழுங்குவது தன் மக்களுயிர் என்று
விளங்கிய படியே அன்னை பசியாறிய நாளது..

கால தேவன் நாளேட்டில்
கடற்கரையின் கறைகள் தீட்டிய கோரம்!
கடல் கலந்த அலைகளை மறைத்த
பிணக்குவியல்களின் பாரம்!

கொள்ளி போட நாதியின்றி..
கோடித் துணி போர்த்த ஆளின்றி
அள்ளி எடுத்து குப்பையாய்
ஆங்கோர் தீவின் ஓரத்தில்
எரிந்த சாம்பல் மேடுகளில்
என்பு பொறுக்க்கி , ஈமை செய்ய
எவரும் இங்கில்லாமல்
பொங்கிய புனல் வந்து
அனல் கொண்டு குவித்த நாளது..!

Friday, December 28, 2007

பாவம் காலதேவன்!

இதோ
ஒரு வருடம் உதிர்கிறது.
இந்த மரத்தின்
முன்னூற்றி அறுபத்தி ஐந்து இலைகளும்
சருகுப் புளுதிகளாகி
மண்ணோடு மண்ணாக
மக்கி போகிறது..

கால தேவன் தன்னுடைய
ஒரு புத்தகத்தை
மூடி வைக்கிறான்.
அவனுடைய
புத்தகங்களின் பக்கங்களில் தான்
எத்தனை எத்தனை
கறைகள்?
எத்த்னை கறுப்புப் பக்கங்கள்?
அழிக்க முடியாத
குருதிப் புனல்களில்
எழுதப்பட்ட
வரலாற்று தொடர்கள்!


உலகத் தேசிய வரைபடத்தின்
ஒவ்வொரு
இரத்தக் கறைகளும்
அவனுடைய நாளேட்டை
அசுத்தப்படுத்திவிட்டன.
வழமை போல..
கால தேவனின் கண்களில்
கூட
கண்ணீரா?
ஆம்.....
ஐந்தடி மனிதனின்
ஆறறிவு
அகிலத்தைப் படுத்தும் பாட்டைப் பார்த்து
அவன் அழுகிறான்.

மிருகமாக இருந்தவனை
இனமென்றும்,மதமென்றும்
மொழியென்றும்
வாழ்வியலுக்காக
வரையறுத்து
தன்னை தானே மானுடமாக்கியவன்..
இன்று மீண்டும்
அதே வரைமுறைகளைக் கொண்டு
எப்படி
மிருகத்தனமாகினான்...
என்று புரியவில்லை
கால தேவனுக்கு!

ஆயினும்
இன்றைய புதிய தளிர் இலையைப்
பார்க்கிறான்...
நம்பிக்கையோடு...
இனிமேலாவது
இவை கறைப்படாமல் இருக்குமாம்..
பாவம்
கால தேவனுக்குக் கூட
பகல் கனவு வரும் போலும்

Wednesday, August 22, 2007

புலன்கள் துருத்தும் உணர்வுகள்..!

சில சமயம்
என் புலன்களில் துருத்தும் உணர்வு
நான்
இங்கே சார்ந்திருப்பதற்கான
தகமைகளற்றவளாய்...!

எனக்கான சரியான இடம்
எங்கோ ஒரு புள்ளியில் புலமாய்,
பயணப்பட வேண்டிய அகதியாய்
நான் !
தவிர்க்கவியலாத , அவசியமான
நீண்ட தூரப் பயணம்
சென்றடையவென்று இன்னமும்
மீந்திருக்கிறது.
சாவிகள் தொலைந்து போன
துருப்பிடித்த இரும்புக் கதவுகளின் பின்னால்
நான் தேடிய என் வாழ்கையின் தீர்வுகளும்
தேர்வுகளின் தகமைகளும்
அடைந்து போனதை
உணர்த்தப்பட்ட நிஜத்தின் வலி
மீண்டு ...வெளிக் கொணர திராணியில்லை..
முயற்சிகளின் தோல்விகளில்
வெகு விரைவில் களைத்துப் போகிறேன்.

விளக்கங்கள் சொல்லவியலாத
கனத்த மனம்
எதனுள்ளோ நான் சிறைபட்டதை
எனக்கு உணர்த்துகிறது.
ஆனாலும் ...அப்பால்
பயணிக்கவென்று எதிரில்
வெறிச்சோடிய
தனித்துப் போன வாழ்கைச்சாலை!
தடைகள் தகர்த்தி
நட்க்க வேண்டிய கட்டாயங்கள் எனக்கு!
ஏனெனில்
சில சமயம்
என் புலன்களில் துருத்தும் உணர்வு,
நான் இங்கே சார்ந்திருப்பதற்கான
தகமைகளற்றவளாய்!!

நினைவுகள் சுமந்து களைத்துவிட்ட இதயத்துடன்
நரகங்களுக்கூடாகச் செல்லும்
புதர்கள் மண்டிய முட் பாதைகளில்
எனக்கான சுவர்க்கத்தின் புலத்தை தேடியபடி..
மூச்சிரைக்கிறது..!
இளைப்பாறவும்,
சற்றே சுமை இறக்கவும்
ஏதாவது இடம் தேடுகிறேன்...
மயானங்கள் இறைந்த பூமியில்
சமாதிக் கற்களா சுமை தாங்கியாக?

ஆனாலும்..அப்பாலும்...
நான்
எனக்கான மனிதர்களின்
இதயங்கள் வைக்க வேண்டிய இடத்தில்
பாறாங்கற்கள் புகுந்திருப்பதை
கவனிக்க விரும்பவில்லை,
நிரந்தரமாய்
முகங்களுக்கு மேல்
முகமூடிகள் பூட்டிய வேடதாரிகளை
பார்க்க வேண்டாம்,
என்னை நானே
இறக்கைகள் இழந்த பட்சியாய்
பச்சாதபப் பட வேண்டாம்...
ஆதலால்
பயணப்பட வேண்டும்..
ஏனெனில்
சில சமயம்
என் புலன்களில் துருத்தும் உணர்வு
நான் இங்கே சார்ந்திருப்பதற்கான
தகமைகளற்றவளாய்!!

முட்டாள்.

உன்னைப் பார்த்த நேரத்தில்
உயிர் நாடிகளில் குளிர் காய்ச்சல்
உறங்க விடாமல்
உயிர் வதைத்தது!!

தேடி வந்து வதை தந்துவிட்டுப் போனவனே
எந்த ஜென்மத்துப் பகையை
இன்று
இங்கு காதலலென்று சொல்லி
பழி தீர்க்கிறாய்?

என் நீரோடை மனதில்
சின்னதாகக் காதல் கல் எறிந்தாய்
என்றிருந்தேன்...
எப்படி இப்படி
இதயத்தில்
பாறாங்கல்லாய் கனக்கிறது?

நேரங்கள் உருண்டோடும் போதெல்லாம்
உன் பிரிவை
கணங்களால் கூட்டியது.
மறு முறை
உன்னைச் சந்திக்கும் வரை
என் கணத்தாக்கங்கள் ஸ்தம்பித்துப் போயின.

உனை காணாத வேளைகளில்
கடிகார முட்களுக்கும்
வேகம் வரவில்லை,
எனக்கு வேதனையே!!

நீ வந்த பின்
அவற்றுக்கும் வேகம் கூடியது
என் நாடித்துடிப்பைப் போல்,
அதுவும் வேதனையே...!

உன்னைப் புறந்தள்ளி
நான் தப்பிப்பதற்கான எந்த வழியுமில்லை!
காதல் என்ற சாபத்துடன்
என் துருப்பிடித்த இதயமும் எண்ணங்களூம்
உன்னை உள்வாங்கிய பின் தான்
சுரணை ஏசுகிறது,
நான் எத்தகைய முட்டாளென்று...!!

Friday, August 17, 2007

இயலாமை


நான்
அமைதியாய் இருப்பது போல்
பாவனை செய்து பார்க்கின்றேன்,
ஆயினும் கடினமாகவே இருக்கின்றது
தினமும் நானாக இல்லாமல் நடிப்பதென்பது...
என்னைச் சுற்றிய சிந்தனைகளில்
அமிழ்த்தவென்று முயன்ற எத்தனிப்புகள் தோற்று
என்னை விட்டு நானே வழுக்கி
எங்கே போய்க் கொண்டிருக்கின்றேன்?

குழப்பங்கள் இல்லாத என்னுடைய சுயத்துக்கு
இனி எங்கே நான் போவது?
கிளறிக் கிளறி நாறிப்போன குப்பைகளுக்குள்
மடிந்து மக்கி உக்கிப் போனது என்ன,
வேட்கை நிறைந்த இலட்சியங்களும்
அரை குறையாய் குற்றுயிராய்
உடைந்து போன கனவுகளுமா?
மலர் தூவும் வசந்தமாய் கனவு காண
புயல் உமிழ்ந்த உக்கிரமான தோல்வியில் காதல்
மரணித்துப் போன யதார்த்தம் சுட்ட இதயம்
மயானமாய்.. சூனியமாய்..வெறிச்சுப் போய்...


அழகாக மெருகேற்றப் பட்ட விதானங்களுடைய
உலகத்தையும்
ஆசீர்வதிக்கப்பட்ட அனுபவங்களையும் அடையும் வரை
காலம் எனக்காக காத்திருக்க மாட்டேனென்ற அநியாயத்துடன்
விரைந்து விரைந்து பயணப்பட
விலகிப் போன உறவை துரத்தும் திராணியில்லை..
மூச்சிரைக்க மூப்படையும் உயிர்க்க்கூட்டைக் காவிய
என்னுடைய ஆயுளின் பயணித்தலில்
வாழ்கையின் கவனப் பிசகல்கள்
சரி செய்யப்படவியலாத தரவுகளுடன்
மிகப் பிழையான கணக்காகிப் போனது போல..?

சூனியம் வைக்கப்பட்ட விதியில்
குழிகளுக்குள் தள்ளிவிட எதிரிகள் தேவைப்படவில்லை,
தூக்கி விட நண்பர்களும் கிடைக்கவில்லை..
என்னைப் பற்றிய கழிவிரக்கங்களுடன்
நூலளவு நம்பிக்கையை பற்றிய தொங்கலில்
ஊசலாடிய எதிர்காலத்தின் வேயப்பட்ட நூலெணியில்
என்னை நானே தாங்கிக் கொண்டு பரிதாபமாக....

வசந்தத்துக்கும் வலிகளுக்கும் மத்தியில்
அன்புக்கும் வெறுப்புக்குமான மையத்தில்
வாழ்கைக்கும் மரணத்துக்குமான இடைப்பட்ட ஆயுளில்
எனக்கும் வலுவிழந்த என்னுடைய சுயத்துக்கும் நடுவில்
அந்தரத்தில் தொங்கும் பாதைகளில்
முட்கள் துருத்திய அபாயம்...

வாழ்கைச் சாகரத்தின் சுழிகளுக்குள்
தொலைக்கப்பட்ட காதலின் பின்னான நிகழ்வுகளில்
ஆர்ப்பரிக்கும் நினைவலைகளின் ஆர்ப்பரிப்பில்
நீலமான ஆழமான, ஆல காலமான மனம்
என்னை அமிழ்த்தி மூச்சிரைக்க வைக்கிறது...
வலி கண்ட இதயம் போராடிய களைப்பில்
கேட்டது
நிற்கட்டுமா ? இருக்கட்டுமா?

Thursday, August 16, 2007

சிசு வதை



அது மூடிக் கிடப்பதில்
சந்ததியாரின் சந்தேகம்
பனிக்காலங்கள் வந்து போனது
பழங்காலக் கருக்குழிக்குள்
நான் கிடந்தேன்.
எப்பொழுதும் போல் பகல் வரும்.
சதைப் புண்களின் சினந்த அவஸ்தை...
அப்பா அவசரம்,
அம்மா மௌனம்,
படியேறி விஞ்ஞான மாமா,
உள்ளே ஊரும் சின்ன நான்.
சரீர வித்தியாசத்தில்
பெட்டைச் சிசு..

அம்மா கொட்டிக் கழுவினாள்
சும்மா போகிற ஜீன்கள்
உறுப்புப் புரட்ச்சி
அறுத்துப் புரட்டி
என் கபாலத்தில் கத்திரி.

அப்பொழுது எனக்கு மூளையில்லை
மூடிய ஓர் வயிற்றுக்குக் கீழ்
இந்தச் தசைகளைச் சிந்தியவன்
கொல்லச் சொன்ன
சந்ததிக் காமுகன்..
என் அப்பனாம்!

மேல் முனைக் குடல்குழியின்
விஞ்ஞான உப்புக்கள்
குடல் பற்றிய பிஞ்சு நகங்கள்
தெரிந்தும்
மலத்தோடு கொட்டிவிட்ட மனிதர்.

அப்பால்...
குளிர் வளர்க்கும் காட்டு மரங்கள்
வாகன ஓரத்தில் வியர்த்த முகம்
வான வீதியில் பறவைக் கூட்டம்..
கருக்கலைப்பில்லையாமே அவையிடத்தில்?
செறிந்து போன உலகின் நிறம் பார்க்க ஆசை.
விஞ்ஞாத்தைத் தலையில் கொட்டியது
கொடுமை

சகதியில் கிடந்து வெம்பிய பிஞ்சாய்
வந்த இடத்திற்கே திரும்பவும் எறிய
மீண்டும்
சதைப் புண்களின் சினந்த அவஸ்தை
அப்பா அவசரம்,
அம்மா மௌனம்,
படியேறி விஞ்ஞான மாமா,
பழங்காலக் கருக்குகுழிக்குள்
நான் கிடந்தேன்.

Wednesday, August 15, 2007

மகளுக்காக...



வயிற்றிலிருப்பது பெண் சிசு என்று அறிந்த பின் பேதைத் தாய் பதை பதைத்தாள். அவள் வயிற்றிலிருக்கும் சிசு அம்மா என்னை வாழ விடு என்று கெஞ்சுவதாக உணர்வில் தவித்துப் போனாள். இன்னொரு தரம் ஒரு பெண் சிசு,...என்னைப் போலே அவள் வாழ்வுமாகிவிடுமோ அல்லது பிறந்த கணமே காணாமல் போய்விடுமோ என்ற கலக்கம் தாய்க்கு! ஆனாலும் மகளுக்காக ஒரு முடிவு எடுக்கிறாள்...சரிவருமா என்று சொல்லுங்கள்...!



பெண் புத்தி பின் புத்தி
அதில்
உன் புத்தியும் சேர்த்தி!

எங்கிருந்தோ ஒருவன்
விதியை எழுதுகிறானாம்,
உன் விதியை
மாற்றி எழுத
மதியிருந்தால்
நிம்மதியாய் நானிருப்பேன்.

பேதை சிசுவே!
உலகப் படம் பார்க்க விரும்புகிறாய்
உன்னை படம் போட
ஒரு கூட்டமே காத்திருக்கிறது.
இங்கே..!

சக்தி இருந்தால்
என் ஆயுள் காலம் வரை
வயிற்றுக்குள்ளேயே
உன்னை சுமந்து திரிவேன்...
மகளே!
நீ
பாதுகாப்பாய் இருப்பாய் அங்கு!

என் முலை திருகி
பால் பருகும் முன்னமே
உன் உயிர் திருகி எறிய
ஒரு கிண்ணம் கள்ளிப் பால்
வைத்திருக்கிறான்
உன்னப்பன்!

பிரசவித்த மயக்கம்,
என்
கண் விழிக்கும் முன்னமே
நீ
மீளாத்துயிலாகிவிடுவாய் ...
யம தூதர்கள் தூரத்திலில்லை...
என் கர்ப்பகிரக வாசலிலேயே...
காத்திருப்பார்கள்!!

என்னுள்
உனை விதைத்தவனே
இன்று
உன் உயிரை அறுவடை செய்ய
நெல்மணிகள் எண்ணிக் கொண்டிருக்கின்றான்...!!

கருவறைக்குள்ளிருக்கும்
உனக்கு
கல்லறைக்கு இடம் தேடுகிற
உறவு முறைகளையா
தேடுகிறாய் சந்திக்க?

நீ பிறந்து
ஒரு கணம் அம்மா என்றழுதால்
ஆயுள் வரைக்கும்
என்னை கொல்ல
அது ஒன்று போதும்
இவர்கள் உன்னைக்
கொன்ற பின்...!!

வண்ணச் சட்டை மாட்டி
வடிவாக தலை சீவி
சின்னக் கை பற்றி
சிங்காரமாய் உனை தூக்கி
என்னமாய் பவனி வரலாம்
எல்லாமும்
சரியாயிருந்தால்...?

ஆனால்....????

இப்போதெல்லாம்
நான்
ஆண்டவனை வேண்டுவதில்லை,
அவனும் ஆண்பால் என்பதால்...
அவனில் சரிபாதியாய்
இருப்பவளும் அனுமதிக்கிறாளே..
அதனால்.....
அவளும் வேண்டாம்...!

யாருமற்ற தனிமையில்
நிராயுத பாணியான நான்
அடிமையே தவிர,
போராளியல்ல
உன்னைக் காப்பாற்ற!

ஆனாலும்...இப்போது
ஒரு போராட்டம் தேவை தான்
தாய்மை
என் உரிமை !
தீர்மானம் போடவும்
தீர்த்துக்கட்டவும் இவர்கள் யார்?

பாலூட்ட மட்டுமா?
பாதுகாக்கவும்
நான் மட்டும் தான்
உனக்கு!!


சரி சிசுவே!
உன் கருவறைக் கனவை
கலைக்கவில்லை!


உனக்கொரு உலகம்
சமைக்க
என் சிறையை உடைப்பேன்!
நாளைக்கே நான்
இவர்களிடம் காணாமல் போவேன்...

இன்னொரு இடத்தில்
உனக்காக மட்டுமேயான நான்...!
உன் வரவுக்காக மட்டுமே
என் வாழ்கையின் காத்திருப்புகள்!

இத்தனை காலமும்
என் சுற்றத்தின் வார்த்தைகளில்
வாழ்கையை
ஏமாந்தேன்!
இன்று உன் வார்த்தையை
என் வாழ்கையாக்குகிறேன்!


ஆனாலும் எச்சரிக்கிறேன்!

உலகம்
ஒரு சாக்கடை!
ஈதேனின் பூங்காவனமென்று
பிரவேசிக்காதே!

இங்கே...
பூக்களாய் சிரிக்கும்,
பசுமையாய் பேசும் மனிதர்களை
நம்பி
வாழ்கைப் பாதையில்
அலட்சியமாய் பிரயாணிக்காதே...
அத்தனைக்குமடியில்
கண்ணிவெடி புதைத்த
களவுகளிருக்கும்.....
நொடியில் நொருங்கிவிடுவாய்!!!

உன் கனவுகளூக்காக மட்டுமே
என் கருவறையுடன்
இந்த எல்லகளைக்
கடக்கிறேன்...

என்னுடைய
உண்மையான வாழ்கையை
இங்கே தான் தொடங்கப் போகிறேன்,
உன்னுடன்
உன் கனவுகளுக்காக....!!

காத்திருக்கிறேன்
ஒரு புதிய விடியலுக்காய்,
உனக்கும் சேர்த்து..!

கிளியும் அவளும்....



என்றைக்குமே மறக்க முடியவில்லை
ஆசிரியை சொன்ன
கிளிக் கதை...

பறக்க வேண்டிய பறவையை
கூண்டில் வைப்பாராம்
விரிக்க வேண்டிய இறகுகளை
வெட்டியே விடுவாராம்...
விழுந்த போது
தூக்கிவிடாமல்
விழுந்து விழுந்துசிரிப்பாராம்...
புரியவில்லை..
ஆசிரியையின் வேதனையும்
விளங்கவில்லை...
அப்போது....


காலங்கள் போனது..
பள்ளியின் பாதியில்
பருவம் வந்துவிட்டதாம் எனக்கு!

பாடங்கள் போதும்
பாத்திரங்கள் துலக்கு..
சமையல் பாடங்கள் படித்து பழகு
என்றாள் பாட்டி.!

என்
வார்த்தைகளை குறைத்தார்.
பார்வையால் முறைத்தார்.
வீதியின் என்னடி பேச்சு ?
விளையாட்டுக்கு முற்றுப் புள்ளி
வைத்துவிட்டு
முற்றத்துக் கோலத்தில்
புள்ளி வை சமர்த்து என்றார் அப்பா!


தாவணியை போர்த்து
நிலம் பார்த்து நடந்து..
போற இடத்தில் பெயர்
வாங்கு
என்றாள் அம்மா!!

பள்ளியில் பறந்த சிட்டு
பருவம் என்ற கூட்டுப்புழுவானேன்..
இறைக்கை முளைத்து
பறக்கப் பழகும் முன்னேயே
கத்தி விழுந்த
சுதந்திரத் தட்டுப்பாடு!!

புத்தகமாக வேண்டிய
வாழ்கையில்
என் கனவும் இலட்சியமும்
கிழிக்கப்பட்ட அட்டைகளாக
அச்சேற்றும் முன்னாலேயே
அட்சரங்கள் சேதமாக்கி...
குப்பைத் தொட்டிக்குள்
பொறுக்கி
படிக்கப் போவது யார்?

ஓடுகள் வேய்ந்த வீடுமட்டுமல்ல
உறவுகளும் கூடவே சிறைகளாக...
வார்த்தைகளுக்கு
அனுமதி மறுக்கப்பட்ட கைதி!
கட்டாய ஊமை...
கனமான நிபந்தனைகளை
அலங்காராமாய் சுமந்தால் மட்டுமே
நான்
கன்னிப் பெண்ணாம்!

வேறொரு காலச் சுழற்சியில்....
என் வீடு தேடி வந்து
சில மாடுகள் தம்மை
விலை பேசினர்...

ஒவ்வொரு ஏலத்துக்கும்
மாடுகள் உட்கார்ந்திருக்க ...
சந்தைப் பொருளாக
பொம்மையாக
நான் நிற்க...
இந்த தடவையாவது கரை சேருவாளா
என்று குறி கேட்டது
என் குடும்பம்...

நான் விலைபோன
நாளைக் கூட கொண்டாடினார்கள்..
அன்று தான்
ஒரு விலங்கு எனக்கு
தாலியென்று சொல்லி
விலங்கு பூட்டியது!!

அன்று தான்
என் அம்மா சொல்லி
நான் பத்திரப்படுத்தின பொக்கிஷம்
கற்பழிக்கப்பட்டது...
அம்மா கடவுளுக்கு நன்றி சொன்னாள்...
என் மகள் வாழ்ந்துவிட்டாளாம்...

இரவுகளில் வேட்கையும்
வேட்டையும் ....
அணைப்பும்... வித்தியாசமாய் இருப்பான்..
பகலில்...
எதிரியாய் மாறிவிடுகிறான்...
ஒவ்வொரு கணவனுக்குள்ளும்
ஒரு அன்னியன் இருப்பானோ?

நான் கற்பழிக்கப்பட்டதற்கான சாட்சி
என் வயிற்றில்...சிசு!
அவனுக்கு பெருமை..
அவனுடைய ஆண்மை
நிரூபிக்கப்பட்டதில்...

மாமி சொல்கிறாள்...
தலைச்சன் பிள்ளை ஆண்பிள்ளை
குடும்ப வழக்கில்...
இது தப்பி தவறி...பெண்ணானால்...
அப்ப வச்சுக்குவேன் ..

சே....
களைத்துப் போனது
என் மனமா?
மரத்துப் போனது என் உணர்வா?
கறுப்பாய் தெரிவது என்ன...
அங்கே,,,?
எதிர்காலமா
வாழ்கையா...??

சில்லிட்ட உணர்வுகள்
மெல்லியதாய்...வயிற்றை தடவுகிறேன்...

அட சிசுவே!
உன் அம்மாவுக்கு
இப்போது புரிகிறது
அந்தக் கிளியின் கதை...!!

வல்லூறுகள் வட்டமிட்டிருக்கும்
அல்லது
கடுவன் பூனை கண்டிருக்கும்..
தள்ளிப் பறக்கவும் இயலாமல்
தத்தளித்து இரையாகியிருக்கும்
மிருகத்தின் வதையில்...
உன் அம்மாவைப் போல...

நீ யார்?
என்னைப் போல் பெண் பாவமா?
அல்லது
இன்னொரு பெண்ணை
வதை செய்ய வரும்
ஆண் பாவியா?
எதுவாயினும்...
நீ வர வேண்டுமா... வெளியில்....?

கவிக்கு பதில்...






கவிஞர் வைரமுத்து தன்னுடைய வைரமுத்து கவிதைகள் தொகுப்பில் வழிப்போக்கன் வார்த்தைகள் என்ற தலைப்பில் இனப் போராட்டத்தில் இலங்கை எரிந்து கொண்டிருந்த வேளையில் இன்னொரு விமான இடைவெளியில் கொஞ்ச நேரம் கொழும்பில் தங்க நேர்ந்த போது 1989ஆம் ஆண்டில் எங்களைப் பற்றி எழுதியிருக்கிறார்...அதை வாசிக்க நேர்ந்த போது அவருக்கு பதில் எழுதி அனுப்ப வேண்டும் என்று தோன்றியது. அவருடைய கவிதையும் அந்தக் கவிதைக்கும் அவருக்கும் நான் எழுதிய பதில் கவிதையும் இங்கே ............

கவிஞர் வைரமுத்து:


உங்கள் பட்சிகள் எங்கே
காடுகளே
உங்கள் பூக்களை
வண்டுகளுக்கு முன்பே
வாசித்தவர் எங்கே சோலைகளே
தேயிலைக் கொழுந்து
கிள்ளியவள் சந்ததி
தேயிலைக் கொழுந்தாய்க்
கிள்ளப்பட்டதோ?
இன்னும்
மேகம் பாடும் மெல்லிசையாய்ப்
பொழியத் தான் பொழிகிறதுமழை.
நனையத் தான் ஆளில்லை
இன்னும்
கிளைகள் மீது
வசந்தம் போடும் கையெழுத்தாய்ப்
பூக்கத்தான் பூக்கின்றன மலர்கள்
பறிக்கத் தான் ஆளில்லை.
எங்கே?
இந்த மண்ணின்
பூர்வீகப் புத்திரர்கள் எங்கே?
சொந்த தேசத்தில்
உயிர்களைப் புதைத்துவிட்டு
தூர தேசங்களில்....
உடல்கள்...உடல்கள்
வெறும் உடல்கல்
ஈழத் தோழா
உந்தையும் தாயும்
மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே
இன்று
தந்தையின் எதிரே
தாயின் துகிலை
உரிந்ததும் இந் நாடே
காதலியோடு
கைவிஅரல் கோத்துக்
கலந்ததும் இந் நாடே
இன்று
காதலன்
சிறைக்குள்
காதலி தரைக்குள்
முடிந்ததும் இந் நாடே
சின்ன வயதில்
சடு குடு விளையாடக்
கிழித்த கோடாஅய்
தடயங்கள் இல்லாத
குடும்பங்கள் ஆயிரம்
ஒரு விதவையின்
முதலிரவு நினைவுகளாய்
துரத்தப்பட்டவரின்
மண்வாசனை ஞாபகங்கள்
அழகான தீவு இது
உலகப் படத்தில் ஒரு
தேன் கூடு
இப்போது
வண்டுகள் பூக்களில்
கண்ணீர் எடுக்கின்றன
இப்போதும்
அருவி விழுகிறது
ஆலோலம் இல்லாமல்

இப்போதும்
குயில் கூவுகிறது
நாக்கைக் கழற்றி வத்துவிட்டு
பிணங்களுக்காகத் தான்
சுடு காடு தயாரிக்கப்பட்டது
இங்குதான்
சுடுகாட்டுக்காகவே
பிணங்கள் தயாரிக்கப்பட்டன.
இந்த ரத்தப் பெருக்கின்
நதி மூலம் எது?
முதலில் வெடித்தது
எவர் துப்பாக்கி?
முதலில் விழுந்தது
எவர் பிணம்?
இந்த ஆராய்ச்சிகளைச்
சோதனைக் கூடத்திற்கு
அனுப்பிவிடுங்கள்
இப்போது தேவை
காயத்திற்கு மருந்து
இப்போது தேவை
தாகத்திற்கு நீர்
இப்போது தேவை
என் தோழர்களுக்கெல்லாம்
தோள்
இப்போது தேவை
இந்த
வழிப்போக்கன் வார்த்தைக்கு
மரியாதை.




எனது பதில்:

காடுகளோடு களனிகளும்
கனன்று சாம்பரான மேட்டில்
நின்று
கழுகுகளைப் பார்த்து
பட்சிகளாகப் பட்டியலிடலாமோ?

நிஜமான பட்சிகளின் சமாதிகளுகருகிலல்லவா
நீ
நின்று கொண்டிருக்கிறாய்
வழிப்போக்கா?!

எங்கள் பட்சிகள்
தூர தேசத்தில் அகதிகளாகவும்
தமிழீழத்தில் அனாதை பிணங்களாகவும்
எரிந்து கொண்டிருந்த வினாடிகளில்
நீ
விமானநிலையக் குளு குளு அறையிலிருந்து
பிடிலல்லவா வாசித்திருக்கிறாய்?

ம்ம்ம்ம்ம்...

தேயிலைக் கொழுந்துகளோடு
தம் உணர்வுகளையும்
சேர்த்துக் கிள்ளி
காயவைத்து, அரைத்துவிட்ட
சந்ததியையும்,
தேசத்தை ஆண்ட
ஈழத் தமிழன் சந்ததியையும்
சேர்த்துத் தான்
இங்கு
தீண்டப்படாதவராய் தீர்த்துக்கட்டப்படுகின்றனர்...

இங்கே
மேகங்களின் மெல்லிசையாலா
மழை பொழிவதாய் நினைத்தாய்?
இல்லை....
தோராயமாக கால் நூற்றாண்டாக
என் தமிழ் தாய்
வெடி முழக்கங்களில் சாம்பராகும்
தன் சந்ததிக்காய்
வடிக்கும் கண்ணீர் அது!

வேண்டுமானால் ...
சுவைத்துப் பார்....
உப்புக் கரிக்கும்!


இன்னும், இன்றும்...
ஏதாவது கிளைகளில்
சில பூக்களாவது பூக்கத் தான் வேண்டும்..
ஏனெனில்
எங்கள் மாவீரரின் சமாதிகளுக்கு
அர்ச்சிக்க அவை தேவை
எமக்கு!

எங்கள் மண்ணின்
பூர்வீகப் புத்திரர்கள்
இங்கே தான்
விதைக்கப்பட்டிருக்கிறார்கள்..

அமிலத் தீயில் எரிந்து
சாம்பராகி
இதே மண்ணில் தான்
உக்கி உரமாகியிருக்கிறார்கள்!


எந்தையும் தாயும் குலவியிருந்த
என் நாட்டில்
பக்கத்து நாட்டான்
என் தாயின் துகிலுரிந்த போது
நீ யாருக்குத் உங்கள் பட்சிகள் எங்கே
காடுகளே
உங்கள் பூக்களை
வண்டுகளுக்கு முன்பே
வாசித்தவர் எங்கே சோலைகளே
தேயிலைக் கொழுந்து
கிள்ளியவள் சந்ததி
தேயிலைக் கொழுந்தாய்க்
கிள்ளப்பட்டதோ?
இன்னும்
மேகம் பாடும் மெல்லிசையாய்ப்
பொழியத் தான் பொழிகிறதுமழை.
நனையத் தான் ஆளில்லை
இன்னும்
கிளைகள் மீது
வசந்தம் போடும் கையெழுத்தாய்ப்
பூக்கத்தான் பூக்கின்றன மலர்கள்
பறிக்கத் தான் ஆளில்லை.
எங்கே?
இந்த மண்ணின்
பூர்வீகப் புத்திரர்கள் எங்கே?
சொந்த தேசத்தில்
உயிர்களைப் புதைத்துவிட்டு
தூர தேசங்களில்....
உடல்கள்...உடல்கள்
வெறும் உடல்கல்
ஈழத் தோழா
உந்தையும் தாயும்
மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே
இன்று
தந்தையின் எதிரே
தாயின் துகிலை
உரிந்ததும் இந் நாடே
காதலியோடு
கைவிஅரல் கோத்துக்
கலந்ததும் இந் நாடே
இன்று
காதலன்
சிறைக்குள்
காதலி தரைக்குள்
முடிந்ததும் இந் நாடே
சின்ன வயதில்
சடு குடு விளையாடக்
கிழித்த கோடாஅய்
தடயங்கள் இல்லாத
குடும்பங்கள் ஆயிரம்
ஒரு விதவையின்
முதலிரவு நினைவுகளாய்
துரத்தப்பட்டவரின்
மண்வாசனை ஞாபகங்கள்
அழகான தீவு இது
உலகப் படத்தில் ஒரு
தேன் கூடு
இப்போது
வண்டுகள் பூக்களில்
கண்ணீர் எடுக்கின்றன
இப்போதும்
அருவி விழுகிறது
ஆலோலம் இல்லாமல்

இப்போதும்
குயில் கூவுகிறது
நாக்கைக் கழற்றி வத்துவிட்டு
பிணங்களுக்காகத் தான்
சுடு காடு தயாரிக்கப்பட்டது
இங்குதான்
சுடுகாட்டுக்காகவே
பிணங்கள் தயாரிக்கப்பட்டன.
இந்த ரத்தப் பெருக்கின்
நதி மூலம் எது?
முதலில் வெடித்தது
எவர் துப்பாக்கி?
முதலில் விழுந்தது
எவர் பிணம்?
இந்த ஆராய்ச்சிகளைச்
சோதனைக் கூடத்திற்கு
அனுப்பிவிடுங்கள்
இப்போது தேவை
காயத்திற்கு மருந்து
இப்போது தேவை
தாகத்திற்கு நீர்
இப்போது தேவை
என் தோழர்களுக்கெல்லாம்
தோள்
இப்போது தேவை
இந்த
வழிப்போக்கன் வார்த்தைக்கு
மரியாதை.


எனது பதில்:

காடுகளோடு களனிகளும்
கனன்று சாம்பரான மேட்டில்
நின்று
கழுகுகளைப் பார்த்து
பட்சிகளாகப் பட்டியலிடலாமோ?

நிஜமான பட்சிகளின் சமாதிகளுகருகிலல்லவா
நீ
நின்று கொண்டிருக்கிறாய்
வழிப்போக்கா?!

எங்கள் பட்சிகள்
தூர தேசத்தில் அகதிகளாகவும்
தமிழீழத்தில் அனாதை பிணங்களாகவும்
எரிந்து கொண்டிருந்த வினாடிகளில்
நீ
விமானநிலையக் குளு குளு அறையிலிருந்து
பிடிலல்லவா வாசித்திருக்கிறாய்?

ம்ம்ம்ம்ம்...

தேயிலைக் கொழுந்துகளோடு
தம் உணர்வுகளையும்
சேர்த்துக் கிள்ளி
காயவைத்து, அரைத்துவிட்ட
சந்ததியையும்,
தேசத்தை ஆண்ட
ஈழத் தமிழன் சந்ததியையும்
சேர்த்துத் தான்
இங்கு
தீண்டப்படாதவராய் தீர்த்துக்கட்டப்படுகின்றனர்...

இங்கே
மேகங்களின் மெல்லிசையாலா
மழை பொழிவதாய் நினைத்தாய்?
இல்லை....
தோராயமாக கால் நூற்றாண்டாக
என் தமிழ் தாய்
வெடி முழக்கங்களில் சாம்பராகும்
தன் சந்ததிக்காய்
வடிக்கும் கண்ணீர் அது!

வேண்டுமானால் ...
சுவைத்துப் பார்....
உப்புக் கரிக்கும்!


இன்னும், இன்றும்...
ஏதாவது கிளைகளில்
சில பூக்களாவது பூக்கத் தான் வேண்டும்..
ஏனெனில்
எங்கள் மாவீரரின் சமாதிகளுக்கு
அர்ச்சிக்க அவை தேவை
எமக்கு!

எங்கள் மண்ணின்
பூர்வீகப் புத்திரர்கள்
இங்கே தான்
விதைக்கப்பட்டிருக்கிறார்கள்..

அமிலத் தீயில் எரிந்து
சாம்பராகி
இதே மண்ணில் தான்
உக்கி உரமாகியிருக்கிறார்கள்!


எந்தையும் தாயும் குலவியிருந்த
என் நாட்டில்
பக்கத்து நாட்டான்
என் தாயின் துகிலுரிந்த போது
நீ யாருக்குத்
தாலாட்டுப் பாடிக்கொண்டிருந்தாய்?

சின்ன வயது நினைவுகளோடு
கழிந்துவிட்டால்
இனிவரும்
எம் சந்ததிக்கு சின்னவயதுப் பிராயமே
தேறாது
என்பதால் தான்
நினைவுகளைத் துரத்திவிட்டு
இலட்சியங்களை நோக்கி
நடை போடுகின்றோம்.

எங்களுக்கு
மறந்தவை பாதி;
மரத்துப் போனவை மீதி!


எங்கள் விதவைகள்
தங்கள் வெள்ளை சேலைகளை
எம் எதிரிகளுக்கு
சமாதானக் கொடிகளாகக் காட்டும் பணிக்கு
தந்துவிடவில்லை;
அவர்களின்
செவ் வண்ண நிறக் கூறைப் புடவைகளின்
சாயங்களை வெளுக்க வைத்த
ஈனர்களின்
செந்நீர் தோய்த்து வர
தந்திருக்கிறார்கள்...
தங்கள் கூந்தலில் பூசி முடிக்க!


மயானங்களைக் கூட அழகாக
வைத்திருந்தவர்கள் தான் நாம்;
ஆனால் இங்கு...
இப்போது
அழகே மயானத்தில் பிணமாகிவிட்டது!


இந்தத் தேன்கூட்டில்
இப்போது தேங்கியிருப்பது
தேன்னல்ல...
எம் சோதரர்களின்
சிதைந்து போன சதை துண்டங்களும் என்பும்
உக்கி ஊறிய
உதிரக் குளம்பும் தான்..!


தயவு செய்து
கேள்வியை மாற்றிக் கேள்...!
முதலில் பிணமானது யார்
என்று!
சரித்திரமே சொல்லும்
தமிழ் பிணம் என்று..!
அதுவும் கூறு கூறுகளாய் சீவி
ஊறுகாய்க்குப் போட்ட
தேசிக்காய் பழத் துண்டங்களாய்....


பின்னால் தான்
துருப் பிடித்த துப்பாக்கிக்களை
வெடிக்கப் பழகிக் கொண்டோம்...


உன் கேள்விகளுக்கு
எதற்கு
விஷேஷமான ஆய்வு கூடம்?
கால் நூற்றண்டுக்கும் மேலாக
இங்கிருக்கும்
தமிழனின்
சரித்திர வரலாற்று ஏடுகளை
வாசிக்காமல் கரையான் புற்றினுள்ளா
புதைத்துவிட்டாய்?


நாங்கள்
எங்கள் காயங்களை மருந்திட்டு
மாற்ற , மறைக்க விரும்பவில்லை;
வெந்து போன புண்களை
புரையேற்றி வைத்தோம்,
ஏனெனில்
வேதனைகளையும், வலிகளையும்
மறக்க விரும்பவில்லை
நாம்!
எங்கள் இழப்புகளின் கோரம்
ஈழம் வரும் வரை
இருக்க வேண்டும்
எப்போதும்..சுரணைகள் தகிப்புடன்..

எமது தாகம்
சமாதனப் பேச்சுகளில்
ஒத்திகை பார்க்க வரும்
சம்மந்தமில்லாத அயல் நாட்டவருக்கு
பகிரப் படும்
சாரயங்களால் தீர்ந்துவிடுவதில்லை;

இங்கே...
இந்த சமாதிகளுக்குள் தூங்கிவிட்ட
சோதரர்களின் கண்களுக்குள்
இன்னமும் விழித்திருக்கும்
தனி ஈழக் கனவு...
நனவானால் மட்டுமே அடங்கக்கூடியது!

எங்கள் தோள்கள்
வலிமையானவை;
தோள் கொடுக்கிறோமென்று
திரண்டு வந்து
முதுகில் குற்றாமல் இருந்தாலே
போதும்;


வழிப் போக்கனே!
உன் ஆதங்கம் புரிகிறது!
ஆனால்
எமது உரிமையும் சுதந்திரமும்
அதை விட உயர்ந்தது!
அரசியல்வாதிகளிடம்
குடமும் , சேலையும் வாங்கிவிட்டு
(வாக்கு)உரிமையில்
கருமை பூசுபவர்களல்ல நாம்!

எங்கள்
தாயின் மானம் காக்க
கொடிச்சீலை திரிப்பதில்
தீவிரமானவர்கள் நாங்கள்!


நீ
வழியில் வந்துவிட்டுப் போகிறவன்;
திரும்ப
வருவாயோ மாட்டாயோ..
நாங்கள்
இங்கேயே வாழ வேண்டுமென்ற
தவமிருப்பவர்கள்...
எங்களுக்குத் தேவை
பலமான அஸ்திவாரங்களுடனான
நிலையான உரிமை தேசம்;
சுற்றுலாக் கூடமல்ல..!


சுதந்திரத்திற்கான விடுதலைப் போரில்
வீறு கொண்ட
தேசத்தின் சந்ததியைப் பார்த்து
துயின்று பார்;
கனவுகள் இனிக்குமென்கிறாய்
நீ!


ஆனால் இவர்கள்
கனவுகளைத் துரத்திவிட்டு
காவலுக்காய்
விழிகளைத் திறந்து வைத்திருப்பவர்கள்..!


இன்னொரு தடவை
சிந்தித்து விட்டு
ஏதாவது
தீரமாய், வீரமாய்..விவேகமாய்
ஒரு வார்த்தை சொல்
எங்கள் வீறுகள்
மேலும் முறுக்கேற...

அல்லாமல்
எமக்காக வீணாக விசும்பாதே
பேதையாய்...
எம் தேசத்தின்
பேடைகள் கூட
பெண் வேங்கைகளாக மாறிய
இத் தருணத்தில்......

சுதந்திரத்திற்கான தவமொன்றில்
இங்கு மரணித்தல் வரம்!
மண் சுமந்த மேனிகளை
இன்று
மண் சுமக்கிறது.
நிதானிக்கிற நேரங்கள் கூட
எதிரிகளுக்கு அவகாசம்,
ஒரு வகையில்....
இடைவேளைகள் வைக்காமல்
தொடர்கின்ற போராட்டங்கள்
தொடக்கி வைக்கின்ற முனைப்புகளி நிறத்து
உணர்வுகள் சுண்டிவிட்ட
எலும்புக் கூடுகளில் உயிர்கள் வைத்து,
எழுந்து நிற்கிறது,
எந்நேரமும்,
எதற்காகவும்
தயாராகி....வரிசை....
எங்கள் எல்லைகள் நிரப்பி.!!

மீள வரல்



முட்கள் பறிக்கப்பட்டுவிட்டதாய்,
பரிசோதிக்கப்பட்ட ரோஜ மலர்களென்று
வாழ்கையில் நம்பியிருந்த
எதுவும் சரிவரவில்லை!

பழகிய மனிதர்களின்
போலிச் சாயம் வெளுத்துப் போக
பூமிப் பரப்பில்
நான் மட்டும் என்னுடன்
எஞ்சிய தனிமையில்....!

யாராலும் புரிந்து கொள்ள முடியாத
என்னாலும் விளக்கவியலாத
என் உணர்வுகளின்
வலிகள்
ஆழமாகக் கிழித்த ரணங்களில்
இன்னமும் சீழ் வழிந்த படி...
இதயம்
துயரத்தில் நாறிப்போயிருக்கிறது...!

அன்னியமானவர்களின் பார்வைகளிலும்
அருவருப்பானவளாய் பதிகின்றேன்.
நான் விரும்பாமலேயே...
ஒடுங்கிப் போன குறுகலான
இந்த அறைக்குள்
என்னை நானே முடக்கியபடி
இன்னும் எத்தனை நாட்கள்...?

பழைய படி
காலங்கள் திசை மாறுகின்றன...
இன்னொரு தடவை
பறவைகள் தம் குஞ்சுகளுடன்
மரங்கள்
புதிதாய் உடுத்திக் கொண்ட
தளிர்களுடன்....
எல்லாம் மாற்றங்களோடு...!

ஆனால்...
என்னைச் சுற்றிய உலகில்
மட்டும்
வெளிறிப் போன சாய முகங்கள்
பூட்டிய
இரக்கம் தராத மனிதங்கள்
முட்கள் மட்டும் எனக்கு
பரிசுகளாக...
மாறாத வலி கொடுக்கும்
தனிமைச் சகதியும்
புதைந்து கொண்டிருக்கும் நானும்...
மாறவில்லை...

ஆனாலும் மாற வேண்டும்...

பயங்கரமான நகங்களும்
கோரமான பற்களுமாய்
வாழ்கை கொடூரமாக
என்னைத் துரத்துவதை
வேடிக்கை பார்க்கும்
வெறிபிடித்த மனிதர்கள்...!

இன்னமும் ஆழமாய்
புதைகுழிக்குள்
நான்
புதைந்து போய்விட்டதாய்
அவர்கள் தீர்மானித்த
அந்த நொடியை
ஏற்க மறுத்த
என்னுடைய சுயம் ...


பௌதீக வலியைவிட
தன்மானம் கொடூரமாக
வலித்தது...!

என்னை நானே அகதியாய்
எத்தனை நாள்
பொறுப்பது?
வலுவிழந்த மனதை
தூக்கி நிமிர்த்த வேண்டி
என்னுள்ளேயே கெஞ்சிய
என்னுடைய இன்னொரு பங்கு...!

எழுவதற்கு
முன்னான தவழுதலில்
என்னுள் பிணைக்கப்பட்ட விலங்குகளை
உடைக்க வேண்டிய
கொடூரமான நிர்ப்பந்தங்கள்
பயமுறுத்தின..!

இறுக்கமான உணர்வுகள்
தளர்த்தி
தவிர்த்து
என்னை விடுவித்து
நான்
வெளியேற வேண்டும்...!

யாரையும் நம்பாமல்
எனக்கு
நான் மட்டுமென்ற
துணையுடன்
உறை நிலையிலிருந்து மீள வேண்டிய
திருப்பு முனையை
நிர்ணயித்துக் கொண்ட போது
எனக்கு யாருமே தேவைப்படவில்லை.

என்னை மட்டுமே
நம்ப வேண்டிய நிர்ப்பந்தம்!
மற்றவர்களின் அனுமானங்களை
அலட்சியங்களாய் துப்பிவிட
நான்
ஒரு அற்பமான இருட்டிலிருந்து
வெளீயேற்றப்பட்டேன்..!

கடினமான கடிவாளங்கள் உதறி
அனுபவங்களில் நிறையவே
கற்றுத் தெளிந்து
நிமிர்ந்த போது
பாதை மாறியிருந்தது...
புதிய பயணத்துக்காய்...
சற்றே இருள் விலகினாற் போல்...!

சுவாசங்கள் இலேசாக
நிமிர்கிறேன்..
மீள வரும் போது
சில வலிகளை
மென்று கொள்ளத் தான் வேண்டும்..!
பயங்கள் ஆற்றி..தெளிந்த பின் ...
பரவாயில்லை....
வாழ்கை ஒன்றும்
அவ்வளவு கடினமில்லை....

வரதட்சணை

புருஷன் என்ற உறவுக்காக
வேலைக்காரி எஜமானனுக்குக்கொடுத்த
ஊதியம் (ஜாஸ்தி தான்)!
கல்யாணச் சந்தையில்
மாப்பிள்ளைகள்
தம்மை மாடுகளாக
அறிமுகப் படுத்த உதவிய
அட்சாரம்!
பெண் மகவை
பிரேத பரிசோதனைக்கு தயார்படுத்தும்
பிரேரணை!
இவன் பிறந்ததும்
அம்மாவின் மனதில்
கணக்குப் பார்க்கப் பட்ட
கணிசம்!
இரண்டு குடும்பங்கள் சேர்ந்து
இவனுக்குக் கூறிய
ஏலம்!
அவனுடைய
முதுகெலும்பின் ஓட்டைகளை
கணக்குப் பார்த்த
கைத்தடி!
தாம்பத்தியம் என்ற திரைமறைவில்
ஓர் ஆண்விபச்சாரி
தனக்கு நிர்ணயித்த
ஆயுள் விலை!!

Monday, July 23, 2007

விழிப்பு


விடியலே!
உன்னை என்னால் பார்க்க முடிகிறது.
ஏனெனில்
நான் விழித்துக் கொண்டேன்,

இனிமையும் பாதுகாப்பாயுமிருந்த
ஒரு பொழுது வாழ்கை
திடீரென்று பொய்யாகி வெளுத்துப் போன
தருணங்களின் பாதிப்பில்
வீழ்ந்துவிடாமல் சுதாகரித்து கொண்டபின்
உயரமாய் எழுந்து நின்று
விடியலுக்கான சூரியக் கதிர்களை மறைக்கும்
மேகத்தின் இருளை விலக்கிப் புறக்கணிக்கும்
அசுரபலத்துடன்
நான்
சமுத்திரத்தின் நீலத்திற்க்கும் கீழான
ஆழத்தையும் அமைதியையும் கொண்ட
பலமான இதயச் சுவர்களில்
ஒளிக்கற்றைகளை உள் வாங்கிப் பழகிய பின்
விடியலே
உன்னை என்னால் நன்றாகவே பார்க்கமுடிகின்றது..
ஏனெனில்
நான் விழித்துக் கொண்டேன்..!

கிழித்தெறிந்து துளைத்துவரும்
சூரியக் கதிர்கள்
இடைமறிக்கும் துயர் முகில்களை சாம்பலாக்கி
இன்னும் சற்று நேரத்தில் வெளிப்படும் போது
என் கண்களிலிருந்து கண்ணீர்க் கறைகள்
காய்ந்து போகும்.
என் இதயத்தினுள் பார்க்கின்றேன்..
என்னவொரு வெளிச்சம்?


ஏய்..!
என்னை வீழ்த்திவிட்டதாய் இறுமாந்தவனே!!
பார்..
நான் சாமர்த்திய சாலி...
இதயத்தினடியில் துயரங்களை புதைத்த
அஸ்திவாரத்தில் நிமிரும் கட்டிடங்களாக
சில இலட்சியங்களுடன்
இன்னொருமுறை வாழ்ந்து பார்க்க வேண்டிய
வாழ்கைக்கான ஒளி வாங்கிய
விழிப்புடன் விழித்துக் கொண்டேன்..

வாழ்கைச் சூதாட்டத்தின்
சீட்டுக்களை விளையாடக் கற்றுக் கொண்டபின்னால்
என் நேரங்களின் அருமையையும்
எனக்குள் விளைந்த அழகின் அருகதையையும்
உணராத..
என்னோடிருந்த பயங்களை உதறிய தருணங்களில்
விடியலே...
உன்னை என்னால் பார்க்கமுடிகின்றது,
ஏனெனில்
நான் விழித்துக் கொண்டுவிட்டேன்..!!

Thursday, May 17, 2007

பெண் சிசு.


அநேகமாக....
தாய் பால் சுவைக்கும் முன்
கள்ளிப் பாலில் மூச்சடக்கப்படலாம்!
அல்லாமல்...
அரசின் தொட்டில்களில்
அனாதைகளின் தொகையில் ஒன்றாகக்
கூட்டப்படலாம்!
ஒரு வேளை... விதிவிலக்கினால்....
சமயத்தில்
கல்யாணச் சந்தையில்
மிருகங்கள் தம்மை
விலை பேசி மேய வர
இவள் மாடாக நிறுத்தப்படலாம்!
மானுட உருவில்
மிருகம் வந்து மேய்ந்து
உழுத பின்
அறுவடை ரண வேதனையாய் வதைத்தாலும்
"சுகப் பிரசவம்" என்று
பொய் பேசப் படலாம்!
சில நேரம்
இவளும் கூட நெல் மணி சேகரிப்பாள்...
தனக்கு மகள் பிறந்தால்.....??????