Thursday, August 16, 2007

சிசு வதை



அது மூடிக் கிடப்பதில்
சந்ததியாரின் சந்தேகம்
பனிக்காலங்கள் வந்து போனது
பழங்காலக் கருக்குழிக்குள்
நான் கிடந்தேன்.
எப்பொழுதும் போல் பகல் வரும்.
சதைப் புண்களின் சினந்த அவஸ்தை...
அப்பா அவசரம்,
அம்மா மௌனம்,
படியேறி விஞ்ஞான மாமா,
உள்ளே ஊரும் சின்ன நான்.
சரீர வித்தியாசத்தில்
பெட்டைச் சிசு..

அம்மா கொட்டிக் கழுவினாள்
சும்மா போகிற ஜீன்கள்
உறுப்புப் புரட்ச்சி
அறுத்துப் புரட்டி
என் கபாலத்தில் கத்திரி.

அப்பொழுது எனக்கு மூளையில்லை
மூடிய ஓர் வயிற்றுக்குக் கீழ்
இந்தச் தசைகளைச் சிந்தியவன்
கொல்லச் சொன்ன
சந்ததிக் காமுகன்..
என் அப்பனாம்!

மேல் முனைக் குடல்குழியின்
விஞ்ஞான உப்புக்கள்
குடல் பற்றிய பிஞ்சு நகங்கள்
தெரிந்தும்
மலத்தோடு கொட்டிவிட்ட மனிதர்.

அப்பால்...
குளிர் வளர்க்கும் காட்டு மரங்கள்
வாகன ஓரத்தில் வியர்த்த முகம்
வான வீதியில் பறவைக் கூட்டம்..
கருக்கலைப்பில்லையாமே அவையிடத்தில்?
செறிந்து போன உலகின் நிறம் பார்க்க ஆசை.
விஞ்ஞாத்தைத் தலையில் கொட்டியது
கொடுமை

சகதியில் கிடந்து வெம்பிய பிஞ்சாய்
வந்த இடத்திற்கே திரும்பவும் எறிய
மீண்டும்
சதைப் புண்களின் சினந்த அவஸ்தை
அப்பா அவசரம்,
அம்மா மௌனம்,
படியேறி விஞ்ஞான மாமா,
பழங்காலக் கருக்குகுழிக்குள்
நான் கிடந்தேன்.

No comments: